25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


BRICS Pay: இந்தியா–ரஷ்யா இணைந்து புதிய கட்டண தள முயற்சி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

BRICS Pay: இந்தியா–ரஷ்யா இணைந்து புதிய கட்டண தள முயற்சி!

உலகளாவிய நிதி அமைப்பில் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் BRICS Pay தளத்தை மேம்படுத்த இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் முதலீட்டு நிதியமான RDIF, JSC BRICS Pay மற்றும் இந்திய அரசு ஆகியவை இணைந்து BRICS Pay தளத்தின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் கட்டண அமைப்புகளுடன் BRICS Pay-ஐ இணைக்கும் வாய்ப்புகள் ஆராயப்படுகின்றன.

முதற்கட்டமாக இந்தியா–ரஷ்யா இடையிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு சேவை வழங்கும் நோக்கம் இருப்பதாகவும், பின்னர் இதை மற்ற BRICS நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நாணயங்களில் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச பணப் பரிவர்த்தனை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News