துபாயில் புதிய ரயில் நிலையம்: செப்டம்பர் 30 முதல் சேவை?
துபாயின் Al Yalayis பகுதியில் அமைக்கப்பட்டுள்ள Etihad Rail நிலையம் செப்டம்பர் 30 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரயில் சேவை தொடங்கிய பிறகு துபாயிலிருந்து அபுதாபி மற்றும் புஜைரா உள்ளிட்ட பகுதிகளுக்கான பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 50 முதல் 60 நிமிடங்களில் இந்தப் பகுதிகளுக்கு பயணிக்க முடியும் என்றும், துபாய் மெட்ரோ உள்ளிட்ட நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுவதால் பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளை விரைவான ரயில் சேவையின் மூலம் இணைக்கும் முயற்சியில் இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply