முதுமையில் மறைந்திருந்துதாக்கும் காசநோய்!
முதுமையில் பசி குறைதல், எடை குறைதல், காரணமின்றி உடல் வலிமையிழத்தல், மிகுதியாக வியர்த்துக் கொட்டல், தொடர்ந்து இருமல் வரல், சளி வெளிப்படல் முதலானவை இருப்பின்,'இவை காசநோயின் அறிகுறியாக இருக்கலாம்' என்று எண்ணி உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். உடல் பரிசோதனைக்குப் பின்பு, மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதோடு சளி உள்ளிட்ட சில பரிசோதனைகளையும் ரத்தப் பரிசோதனைகளையும் செய்வார். நோய் இருப்பது உறுதியாகிவிட்டால் தக்க சிகிச்சை அளிப்பார்.
மாண்டோ பரிசோதனை :.
ஒருவருக்குக்'காசநோய் இருப்பதை உறுதிசெய்ய இப்பரிசோதனை செய்யப்படும். கையில் ஒருசில சொட்டுகள் திரவத்தை ஊசி மூலம் செலுத்தி, அதன் விளைவானது சுமார்48 மணி கழித்துப் பார்க்கப்படும். இது மாண்டோ பரிசோதனை எனப்படும். ஊசி செலுத்திய இடத்தில்48 மணி நேரத்துக்குப் பின்பு நன்றாக வீங்கி இருந்தால், பரிசோதனை பாசிட்டிவ் என்றும், அதில் வீக்கம் ஏதுமில்லை என்றால் பரிசோதனை நெகட்டிவ் என்றும் வரும்.
ஆனால் முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் காசநோய் இருந்தாலும் இப்பரிசோதனை நெகட்டிவ் என்று வரலாம். தோளில் செய்யும் மாண்டோ பரிசோதனை சாதகமாக இருப்பின் காசநோய் இருப்பதை ஓரளவுக்கு உறுதி செய்துகொள்ள முடியும். அதேசமயத்தில் மாண்டோ பரிசோதனை சாதகமாகஇல்லாமல் இருப்பின் நோயாளிக்குக் காசநோய் இல்லை என்று சொல்லிவிடவும் முடியாது. ஏனெனில் இந்தப் பரிசோதனை வேறுசில காரணங்களாலும் சாதகமாக இல்லாமல் இருக்கலாம். உதாரணம்: ஸ்டீராய்டு மாத்திரை, புற்றுநோய், சத்துணவுக் குறைவு, மிகவும் மூப்படைந்த நிலை.
மார்பு எக்ஸ்ரே-
காசநோய்களைப் பற்றிச் சற்று விவரமாகத் தெரிந்துகொள்ள இப்பரிசோதனை மிகவும் முக்கியமானது.
சிகிச்சை முறை
காசநோயைச் சுமார்6-9 மாதங்களில் பூரணமாகக் குணப்படுத்த முடியும். மருந்தை விடாமல் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு மட்டிலும் மருந்து எதிர்ப்பாற்றல்(DrugResistant) தோன்றலாம். அவர்களுக்கு மட்டிலும் புதிய மருத்துவச் சிகிச்சை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஒரு நல்ல செய்தியாகும்.
24 பழைய சிகிச்சை முறைக்கு 18 மாதங்களாக இருப்பதை, புது சிகிச்சை மூலம் 6 மாதங்களாகக் குறைக்க முடியும்.
மருந்து மிக விரைவாகவும் தீவிரமாகவும் செயல்படும்.
பக்கவிளைவுகள் அதிகம் கிடையாது.
மருந்தின் விலையும் குறைவு.
நம் நாட்டில் உள்ள காசநோய் மருந்து எதிர்ப்பாற்றல் உள்ள சுமார் 75,000 பேர் பலனடைவார்கள்.
0
Leave a Reply