25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 24 வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 24 வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு மூலம் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டம் 2026 மே 10 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 200 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 4,47,087 நுகர்வோர் இனி மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மொத்தமாக 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 6,75,024 நுகர்வோர் இந்த திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர்.

501 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வழக்கம்போல 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புள்ளிவிவரங்களின்படி 100 யூனிட் வரை பயன்படுத்தும் 2,50,608 நபர்களும், 101 முதல் 200 யூனிட் வரைபயன்படுத்தும் 1,96,479 நபர்களும் முழுமையாக மின் கட்டண விலக்கைப் பெறுகின்றனர். மேலும், 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் 1,97,185 நபர்களும், 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் 30,752 நபர்களும் 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அதிக அளவில் பயனடைந்து, குடும்பங்களின் மின்கட்டணச் சுமை குறைந்து அத்தியாவசிய செலவுகளுக்கு கூடுதல் சேமிப்பை பயன்படுத்த இத்திட்டம் உறுதுணையாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் தங்களது மின்சுமை குறைந்துள்ளதாகவும், சேமிக்கப்படும் தொகையை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News