25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


‘Coffee With Collector” 156-வது கலந்துரையாடல்  நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘Coffee With Collector” 156-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (17.03.2025) நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர்(Coffee With Collector) என்ற 156- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்துரையாடினார்.

பெரும்பாலான அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் வாயிலாக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள்; நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தேர்விற்கான பயிற்சி கையேடுகள், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சிறிய அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியால் போட்டித்தேர்வுக்கு பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வேலைவாய்ப்பை பெற்று தரும் உயர்ந்த நோக்கத்திலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தனியாகவும், குழுவாக இணைந்து பயில்வதற்கும், அனைத்து நாட்களிலும் ஏழை எளிய மாணவர்கள் மிகுந்த காற்றோட்ட வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் படிப்பதற்கும், மாணவர்கள் மாலை நேரங்களில் மின் விளக்கு வசதியுடன் படிப்பதற்கும், எளிதாக பேருந்து வசதியுடன் இங்கு வந்து பயில்தற்கும் வசதியாக ரூ.50 இலட்சம் மதிப்பில் போட்டித்தேர்வு பயில்வோர் பூங்கா அமைக்கப்பட்டு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதன்படி, இன்று நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர்(Coffee With Collector) 156- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலின் போது, போட்டித்தேர்வுக்கு தங்களை தயார் செய்தது, அதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் அரசு வழங்கும் இலவச பயிற்சிகள், கையேடுகள், குறிப்புகள் ஆகியவற்றின் பயன்கள், மேலும் பயிற்சியை மேம்படுத்த தேவையான வசதிகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.மேலும், அரசுப் பணியில் சேரவிருக்கும் தேர்வர்களுக்கு வாழ்த்துக்களையும், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இது போன்று போட்டித்தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற ஏதுவாக எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News