மந்திரங்களை 108 முறை சொல்ல காரணம்?
பொதுவாக, உரு ஏற திரு ஏறும்' என்பார்கள். வெறும் சொல்லாக இருக்கக் கூடிய மந்திரத்தை தெய்வ நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் பூரணத்துவத்தை தொடும் அளவிற்கு சொல்ல சொல்ல அந்த மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் தெய்வீக தன்மையை பெற துவங்கி விடும். நாம் மனதார உச்சரிக்கும் அந்த மந்திரம் நம்முடை உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் எதற்காக மாற்றம் வர வேண்டும் என்றால், தலையெழுத்து, விதி என நாம் சொல்லும் கர்மவினைகள் அனைத்தும் எண்ணத்தில் இருந்து தான் ஆரம்பமாகின்றன. எண்ணம், சொல்லாகி, அது செயலாகி, அதனால் ஏற்படும் விளைவுகளே கர்மவினையாக மாறி. நம்முடைய வாழ்வில் பல விதமான துன்பங்களை ஏற்படுத்துகிறது. அதனால் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். கர்மவினைகளை உருவாக்கும் உள்ளம் இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதற்காகதான் மந்திரங்களை 108 முறை சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
0
Leave a Reply