25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஒயிட் குஸ்கா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒயிட் குஸ்கா

குஸ்கா தென்னிந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். இதை குருமாவுடன் சேர்த்து சாப்பிடவே மக்கள் விரும்புவார்கள். உருது மொழியில்‘குசுக்’ என்றால்‘உலர்ந்த’ என்று பொருள். இந்த உணவும் உலர்ந்து இருப்பதால் குஸ்கா என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தேவையானபொருட்கள்: பாஸ்மதி அரிசி-1½ கிலோ.நெய்-1 குழிக்கரண்டி,எண்ணெய்-1 குழிக்கரண்டி.கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை- தேவையான அளவு.முந்திரி-10,பாதாம்-20,நறுக்கிய வெங்காயம்-2,பச்சை மிளகாய்-6,இஞ்சி பூண்டு விழுது-1½ தேக்கரண்டி.கொத்தமல்லி, புதினா- தேவையான அளவு,தயிர்-200கிராம்.தக்காளி-1 ½,உப்பு - தேவையான அளவு.

செய்முறை-:  ½ கிலோபாஸ்மதி அரிசியை கழுவி ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு நன்றாக அகண்ட பாத்திரத்தில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், ஒரு குழிக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் மசாலா பொருட்களான பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த2 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்6 சேர்த்து அத்துடன்10 முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்றாக கோல்டன் பிரவுன் ஆன பிறகு அதோடு1½ தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அத்துடன் கொத்தமல்லி, புதினா ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும். ஒயிட் குஸ்காவிற்கு தயிர் மிகவும் முக்கியமானது அதுவே புளிப்பு சுவையை தரும். அதனால்200 கிராம் தயிரை சேர்த்து நன்றாக வதக்கவும்.இப்போது20 பாதாமை ஊற வைத்து தோலூரித்து அரைத்து செய்த கலவையை அத்துடன் சேர்க்கவும். மேலும்,1½ தக்காளியை கடைசியாக சேர்த்துவிட்டு குஸ்காவிற்கு தேவையான உப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் வடிகட்டி வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து10 நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும்.10 நிமிடத்திற்கு பிறகு திறந்து புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து மூடிப்போட்டு குஸ்காவை தம்மில் வைத்துடுங்க. அரைமணி நேரம் குஸ்காவை நன்றாக வேகவைத்த பிறகு இறக்கிவிடவும்.ஒயிட் குஸ்கா தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News