25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


UPI பரிவர்த்தனைக்கு எவ்வளவு Limit? கட்டணம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

UPI பரிவர்த்தனைக்கு எவ்வளவு Limit? கட்டணம்?

Google Pay, PhonePe, Paytm, BHIM உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு வரம்புகள் உள்ளன.

தனிநபர் மற்றும் வணிகர் இடையேயான வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு தினசரி ரூ.1 லட்சம் வரையிலும், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் ரூ.5 லட்சம் வரையிலும் பரிவர்த்தனை செய்ய முடியும்.

Health & Life Insurance மற்றும் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான பரிவர்த்தனைகளில், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரையிலும், ஒரு நாளில் ரூ.10 லட்சம் வரையிலும் வரம்பு உள்ளது.

UPI Lite மூலம் ரூ.1,000 வரையிலும், UPI 123Pay மூலம் ரூ.10,000 வரையிலும் பரிவர்த்தனை செய்யலாம்.

UPI பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.

ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணம், பங்குச்சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் எனவும், ரூ.2,000-க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதம் ரூ.1 லட்சம் வரை UPI மூலம் பணம் பெறும் சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தனிநபர்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றங்கள் மற்றும் சுய கணக்கு பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News