25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கேட்டராக்ட்டின் அறிகுறிகள் என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேட்டராக்ட்டின் அறிகுறிகள் என்ன?

கேட்டராக்ட் பிரச்னை உள்ள  ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனால் கேட்டராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாகக் கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை உணர்வது வழக்கம். எனவே பின்வருவனவற்றைக் கேட்டராக்டின் அறிகுறிகள் எனலாம்.

பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

நிறங்களைப் பிரித்தறிவதில் சிரமம் இருப்பது மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது

‎பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது

சில வெளிச்சங்கள் மிகக் குறைவாகவும். சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.

படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமம் ஏற்படுவது. குறிப்பாக இரவு நேரங்களில் படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அதிகமாகச் சிரமம் ஏற்படுவது.

வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போலத் தெரிவது, குறிப்பாக வாகன வெளிச்சத்தை சுற்றி அவ்வாறு தெரியலாம்.

நிறங்கள் தெளிவாகத் தெரியாமல்  இருக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News