25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை விதிகளுக்கு அக்கறை கொடுக்கும் போக்கு வரத்து போலீசார், அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளின் படி, நகர பகுதிகளில் எல்லைக்குட்பட்ட வாகனங்களை இயக்கும்போது குறைந்த பட்ச ஒளி விளக்கு ,எனும்   'லோ பீம்' உபயோகிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.வாகன ஒட்டிகள் இரவில் பிரயாணம் செய்யும் பொழுது, எதிரில் வரும் வாகனங்களுக்கு கார் லைட்டை டிம் செய்து, பின் ஒளிர விட வேண்டும் என் பது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது வாகன விதி .இது யாருக்கும் தெரியாதா? அல்லது அலட்சியமா?அதிகபட்ச ஒளி விளக்குகளை எறிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை.திடீரென அதிக ஒளி கண்ணில் படும்போது பார்வை ஸ்தம்பித்து முடிவெடுப்பதற்குள் விபத்து ஏற்படுவது  உடன், தொடர்ந்து எதிர் கொள்ளும் இத்தகைய ஒளியால் விழித்திரை பாதித்து பார்வை திறன் குறைகிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள், மக்கள்எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News