25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விமானங்களின்   வகைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விமானங்களின்  வகைகள்

விமானங்களில் சில வகை உள்ளன. ஆரம்பத்தில் பொதுப்போக்குவரத்து விமானங்கள் மணிக்கு 100 முதல் 350 மைல்கள் வரை மட்டுமே பறக்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. தற்போதுகூட இவை சிறிய ரக விமானம் என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன. வெளிநாடுகளில் பணக்காரர்கள் பயன்படுத்தும் 2 மற்றும் 4 இருக்கைகள் கொண்ட விமானங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவை. அடுத்ததாக, போயிங்-747 என்ற ரக விமானங்கள் சப்-சோனிக் விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மணிக்கு 350 முதல் 750 மைல்கள் வேகத்தில் பறக்கும். தற்போது புழக்கத்தில் உள்ள பல விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் இந்த வகையை சேர்ந்தவை.

இந்த விமானங்களின் வேகம் ஒலியின் வேகத்தைவிட சற்று குறைவாகும். இதன் என்ஜின்கள் இலகு ரகத்தை சேர்ந்தவை என்றாலும், அதிக சக்தி வாய்ந்தவை. மற்றொரு வகை விமானங்கள் என்பது,கான்கார்டு எனப்படும் சூப்பர் சோனிக் விமானங்கள். இவை மணிக்கு 760 முதல் 3,500 மைல்கள் தொலைவை எட்டும். 760 மைல்கள் என்பது ஒலியின் வேகம். எனவே சூப்பர் சோனிக் விமானங்களால் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பறக்க முடியும். அடுத்ததாக, ஹைபர் சோனிக் ராக்கெட்டுகள். இவை மணிக்கு 3500 முதல் 7 ஆயிரம் மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தவை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News