25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சுருட்டை முடி பராமரிக்க
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுருட்டை முடி பராமரிக்க

சுருட்டை முடி உள்ளவர்கள்  வாரத்திற்கு ஒருமுறையாவது தலைமுடியை ஆழமாக கண்டிஷனிங் செய்ய வேண்டும்.கூந்தலை அலசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.இது முடி வறண்டு போவதை தடுக்கிறது. முடிக்கு எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்து வரலாம்.சுருள் கூந்தல் இருப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தும் முன்பு, கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க, நிச்சயமாக எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் ஏதாவதை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது, ஷாம்பு போட்டு ஹேர்வாஷ் செய்த பிறகு கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க உதவும். கிளிசரின், கற்றாழை, ஷியா பட்டர் உள்ளிட்ட மைல்டான ஷாம்பு வகைகள் கிடைக்கின்றன. இவை ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் சுருள் முடிக்கு தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கிறது. 

வழக்கமான கூந்தலை விட சுருள் கேசத்துக்கு கூடுதலாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை நேரடியாக உள்ளங்கையில் ஊற்றி, கூந்தலின் நீளத்துக்கு அப்ளை செய்ய வேண்டும். முதலில், கூந்தலில் சிக்கு நீக்கி விட்டால், கண்டிஷனரை எளிதாக அப்ளை செய்ய முடியும். நீங்கள் எந்த பிராண்டு ஷாம்பூவை பயன்படுத்துகிறீர்களோ, அதே பிராண்டு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். சில கண்டிஷனர்களில், தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர் போன்ற இயற்கையாக டீ-டாங்கில் செய்ய உதவும் பொருட்களோடு வருகிறது. ஏற்கனவே கூறியது போல, உங்கள் முடியை வறட்சியாக்கும் சல்பேட், பாராபென் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாத கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

தலைக்கு குளித்து வந்த பின்னர், பருத்தி துணி அல்லது டவல் பயன்படுத்தி, தலையை உலர்த்தவும். சுருள் சுருளான கூந்தல் அப்படியே இருக்க, தற்போது பலவிதமான ஜெல் பொருட்கள் கிடைக்கின்றன. லைட்வெயிட் கர்லிங் ஜெல்லை வாங்கி நீங்கள் ஹேர் வாஷ் செய்யும் போதெல்லாம் பயன்படுத்தலாம். இது உங்கள் சுருள் கேசத்திற்கு அதிக ஹைட்ரேஷன் வழங்கி, 2 நாட்கள் வரை ஈரப்பதத்தை நீட்டிக்கச் செய்யும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News