25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


10 ஆண்டுகளில் வெளியான த்ரில்லர் படங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

10 ஆண்டுகளில் வெளியான த்ரில்லர் படங்கள்

தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவராத முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இவை. கடந்த10 ஆண்டுகளில் வெளியான துப்பறியும் படங்களைப் பார்க்கலாம்.

துருவங்கள்16 டி16 என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன்.2016ல் வெளியானது. ரகுமான் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த படம் இது.

மெட்ரோ-2016ல் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். ஸ்ரீஷ், பாபிசிம்ஹா, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருடர்களிடமிருந்து பெண்கள் எப்படி தப்பிப்பது என்பதை சொல்லித் தரும் ஒரு விழிப்புணர்வு படம்.

 தோட்டாக்கள்-2017ல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான படம். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

யுத்தம் செய்-2011ல் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேரன் நடித்த ஒரே த்ரில்லர் படம் இது. கொஞ்சம் ரூட்டை மாற்றித் தான் பார்ப்போமே என்று நடித்தார். ஆனால் படம் பிளாப் ஆகிவிட்டது. அதனால் தன் வழக்கமான பாதைக்கே திரும்பவும் சென்றுவிட்டார்.

நான்-2012ல் வெளியான படம். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்துள்ளார். சித்தார்த், வேணுகோபால் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியை வித்தியாசமாகக் காட்டிய படம்.

குற்றமே தண்டனை-2016ல் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம். விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நாயகி கொல்லப்படுகிறாள். அந்தக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டறியும் படம்.

ஈரம்-2009ல் அறிவழகன் இயக்கத்தில் வெளியான படம். ஆதி, நந்தா, சிந்து மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். தண்ணீர் எப்படி பழிவாங்குகிறது என்பது தான் கதை. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தெகிடி-2014ல் ரமேஷ் இயக்கிய படம். அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கொலையை மையமாகக் கொண்டு துப்பறியும் படம். படத்தின் தலைப்பே புரியாத புதிராக உள்ளதே என்ற கோணத்தில் என்ன தான் படத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதப் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் யாரையும் ஏமாற்றாமல் பலரையும் ரசிக்க வைத்தது இந்தப் படம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News