25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மக்களைத் தேடிச் சென்று 36 குடும்பங்களுக்கு அவர்கள் இல்லத்திலேயே பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களைத் தேடிச் சென்று 36 குடும்பங்களுக்கு அவர்கள் இல்லத்திலேயே பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் கோட்டநத்தம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்ற, 36 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (21.02.2026) நேரில் சென்று வழங்கினார்.

சொந்தமாக வீடு இல்லாமல், ஆட்சேபனை இல்லாத அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நில உரிமை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் "இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்" என்ற உன்னதமான திட்டத்தை செயல்பட்டு வருகிறது. இது ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் நிலையான தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நமது மாவட்டம் திகழ்கிறது.

அந்த வகையில்கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள், தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வேண்டி விடுத்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதமாகப் பரிசீலித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் இதற்கான இணையவழி பட்டாக்கள் (Online Patta) தயார் செய்யப்பட்டன.அதனடிப்படையில், கோட்டநத்தம் பகுதியில் குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 36 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். 

தங்கள் இடத்திற்கான முறையான அரசு அங்கீகாரம் (பட்டா) கிடைத்ததன் மூலம் தங்களின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வின் போது, விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News