25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


100% மானியத்தில் உயர் ரக பருப்பு விதை உற்பத்தி மற்றும் கொள்முதல் செயல் விளக்கத்திடல் அமைத்திட வருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

100% மானியத்தில் உயர் ரக பருப்பு விதை உற்பத்தி மற்றும் கொள்முதல் செயல் விளக்கத்திடல் அமைத்திட வருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பருப்பு வகைகளில் முழுமையான தன்னிறைவு அடைவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் மூலம் ஆத்மநிர்பர்தாவிற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு வேளாண்மையின் மூலம் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 
2025 – 26 முதல் 2030 – 31 வரை பயறு உற்பத்தி அதிகரிப்பு பயறு வகை சாகுபடி பரப்பு விரிவாக்கம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. 

   விருதுநகர் மாவட்டத்திற்கு உளுந்து மற்றும் பாசிபயறு வகைகளில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் முக்கிய கூறான சான்று விதை விநியோகம் (8 ஆண்டுகளுக்கு உட்பட்டது) மூலம் குவிண்டாலுக்கு ரூ.6,000/- வீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு 400 குவிண்டால் உயர்ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  ரூ.10,000/- மதிப்புள்ள செயல்விளக்க திடல் அமைப்பதற்கு தேவையான இடுபொருட்கள் (விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், Pulse wonder, பயிர் பாதுகாப்பு மருந்துகள்) விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. 

எனவே, விருதுநகர் மாவட்ட  விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.  அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற்று பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News