25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் 18 TH JUNE
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 18 TH JUNE

டென்னிஸ் 

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், ஜூன் 30-ஜூலை 13ல் லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் பிரிட்டனில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி, செக்குடியரசின் ஜாகுப், டென்மார்க்கின் ஹோல்கர் ஜோடியை சந்தித்தது.

'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வசப்படுத்தின. அடுத்து எடுத்து நடந்த நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி (10-6) வென்றது.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 6-7, 10-6 வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

வாலிபால் 

உஸ்பெகிஸ்தானில் 16, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. இந்திய அணி 19 வயது பிரிவில் பங்கேற்றது. முதல் 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வியடைந்தது இந்திய அணி. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, கிர்கிஸ் தான் மோதின. முதல் 'செட்டை இழந்த இந்தியா (21-25) அடுத்த மூன்று செட்டுகளையும் 25-14, 25-08, 25-23 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News