25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தன்னலமற்ற தியாகிகளான மரங்களை கடவுளாகப் போற்றி, மதித்து மரியாதை செய்யலாமே!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தன்னலமற்ற தியாகிகளான மரங்களை கடவுளாகப் போற்றி, மதித்து மரியாதை செய்யலாமே!

மரத்தில் ஆணி அடிப்பதை தவிர்ப்பது மிகமிக முக்கியம்.

 மண்ணுக்கும் மரம் தான் உரம்,மழைக்கும் மரம் தான் உரம்.

 மனிதா கோடாரியை தூர எறி, மரம் காக்கும் புதுக்கொள்கை தரி.

உண்ணக் கனி ஒதுங்க நிழல்.

 உடலுக்கு மருந்து, உணர்வுக்கு விருந்து 

அடையக் குடில், அடைக்கக் கதவு அழகு வேலி ,ஆடத் தூளி, தடவத் தைலம், தாளிக்க எண்ணெய் எழுதக் காகிதம், எரிக்க விறகு,

மரம் தான், மரம் தான், எல்லாம் மரம்தான், மறந்தான், மறந்தான், மனிதன் மறந்தான். மரம் ஓர் தியாகி தன்னை  வெட்ட வந்த கோடாரிக்கு, கைபிடியாய் தன்னையே கொடுத்ததே .

பூமிப்பந்தில் தெரியும் நீல நிறம் மீன்கள் வாழுமிடம் .

மரங்கள் பசுமை நிறம் மனிதன் வாழுமிடம்.

மரம் இல்லா வாழ்க்கை மரண வாழ்க்கை. 

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

ஒருமரம் ஒரு வருடத்திற்கு 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்க ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஒரு வருடத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜன் 18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது.ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்ஸைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News