25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முடங்கியார் ரோடு அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சாலையோர  கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முடங்கியார் ரோடு அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சாலையோர  கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பு.

அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி,  ராஜபாளையம் நகர் பகுதி நடுவே காந்தி சிலை ரவுண்டானா முதல் தாலுகா அலுவலகம் வரை உள்ள முடங்கியார் ரோடு சுருங்கிவிட்டது. இதனால் மக்கள் தினமும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாக வருகின்றனர்.. 

கடைகளுக்கு வருவோர் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதும்,  வரிசையாக பார்க்கிங் பகுதிகளாக மாற்றியும் வருகின்றனர். தனியார் சந்தை முன்பு ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக சாலையின் வெள்ளை கோடு மேல் வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஏற்கனவே இந்த இடம் குடியிருப்புகள் பள்ளி கல்லுாரி மாணவர்கள் கடக்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு தனியார் சந்தை, உழவர் சந்தை அரசு கால்நடை மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளது.

போட்டி போட்டுக் கொண்டு ரோட்டை ஆக்கிரமித்து நிற்பதால் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்து நிரந்தர இடமாக மாற்றி வைத்துள்ளனர்.

 நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால் சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையம் நகர் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து கோயில் மாரியம்மன் வரையிலான இரண்டு கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலையின் நடுவே சிறிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பாதித்து வருகின்றன. திடீரென தென்படும் இக்குழிகளால் டூவிலரில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருவதுடன் பின்னால் வருபவர்களும் மோதலுக்கு ஆளாகின்றனர்.இவ்வழியாக சென்றும்அதிகாரிகள் சரி செய்யாமல் வைத்துள்ளனர். . நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால்சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News