25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


RailOne app அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

RailOne app அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!

 இந்தியா முழுவதும் ரயில் சேவைகளை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கும் விதமாக ரயில்வே துறைRailOne செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.புறநகர் ரயில்களுக்கு டிக்கெட் புக் செய்யUTS செயலி, வெளியூர் முன்பதிவுகளுக்குIRCTC,RailConnect என ஒவ்வொன்றுக்கும் பல செயலிகள் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில் தற்போது அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து RailOne செயலி அறிமுகமாகியுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். 

 Rail One செயலியில் உள்ள வசதிகள்:

  • முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லா டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளும் வசதி
  • ரயில் வந்து சேரும் நடைமேடை எண், கோச் வரிசை, ட்ராக்கிங், பிஎன்ஆர் நிலை சரிபார்த்தல் உள்ளிட்ட வசதிகள்
  • பயண திட்டமிடுதல், ரயில் சேவை உதவி எண்கள் மற்றும் விவரங்கள்
  • ரயிலில் உணவு முன்பதிவு செய்தல், ஆன்லை ஆர்டர் செய்யும் வசதி
  • ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதி
  • ரயில்வே இ வாலெட்டில் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு எளிதாக டிக்கெட் புக் செய்யும் வசதி
  • MPIN மற்றும் பயொமெட்ரிக் லாக் இன் வசதிகள், கெஸ்ட் லாக் இன் வசதிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News