25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சொரியாஸிஸ் ( Psoriasis )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சொரியாஸிஸ் ( Psoriasis )

சொரியாஸிஸ் என்பது ஒரு தோல் நோய்.இது பரம்பரையாக அடுத்த அடுத்த தலைமுறையினருக்கு வரும் நோய். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவும் தொற்று நோய் அல்ல. இளம் குழந்தைகள் முதல் வயதான பெரியோரையும் இந்நோய் தாக்குகிறது.

ஆரம்பம் ஒரு சிவப்புப் புள்ளிதான். புள்ளி பெரிதாக வட்ட வட்டமாக மலர்ந்து, அரிப்புடன் கூடிய உலர்ந்த வெள்ளை நிறச் செதில்களுடன்(Silverwhitescales) பரவிச் செதில்கள் உதிர ஆரம்பிக்கின்றன. உடலில் இந்நோய்காணப்படும் இடங்கள் முழுங்கை, முழங்கால், உள்ளங்கை, உள்ளங்கால், முதுகின் கீழ்ப் பகுதி, இடுப்பின் மேல் பகுதி, தலைப்பகுதி. இது தோல் நோய் என்றாலும், சில நேரங்களில், கை விரல்கள், கால் விரல்கள், மூட்டுகளையும் விரல் நகங்களையும் பாதிக்கிறது.

இந்நோய் அதிகப்படுத்தும் காரணிகள் -மன உளைச்சல்,மது அருந்துதல், புகைப்பிடித்தல்,சூழ்நிலை மாற்றம், 

கோடைக்காலம், குளிர்காலம்,தவறான உணவுப் பழக்கங்கள்.

ஸ்டீராய்டு போன்ற களிம்புகள் மற்றும் மிதோடிரைக்ஸ்டைட் போன்ற மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியது வரும். புதுவரவாக, உள்ளBiologics(Monoclonalantibodies). நோய்த் தாக்கத்தின் கடுமையைக் குறைத்து, நோயாளர்கள் மற்ற சக மனிதர் போன்று இயல்பான வாழ்க்கை வாழ வழி வகுக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News