மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் ஆலோசனை மையம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் REACT தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் (26.10.2026) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குதல், தனியார்துறையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருதல் மற்றும் அரசின் சார்பில் வழங்கக்கூடிய வங்கிக் கடன்களுக்கு வழிகாட்டுவதற்காக இம்மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். திறன் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் ஒருவரும் விடுபடாமல் இம்மையத்தின் வாயிலாக பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாற்றுத்திறனாளிகள் பிறர் துணையின்றி தன்னிச்சையாக செயல்படும் வகையிலும் தங்களது பணிகளை தாங்களே மேற்கொள்ளும் வகையில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,73,880 மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன்பேசி, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38,400 மதிப்பிலான காதொலி கருவிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.65,000 மதிப்பிலான செயற்கை கால் என மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.77 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
எனவே, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இம்மையத்தினை பயன்படுத்தி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் REACT தெண்டு நிறுவன இயக்குனர் ஆகியோருக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், REACT தொண்டு நிறுவன இயக்குனர் திரு.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply