செண்டுமல்லி சாகுபடி.
செண்டுமல்லி அனைத்துமண் வகைகளிலும்பயிரிடலாம். மணற்பாங்கானமண், களிமண்கலந்த மண்மிகவும் ஏற்றது.
செண்டுமல்லி பயிரிடஏற்ற பருவமாகஅக்டோபர் முதல்ஜனவரி வரையிலும், பிப்ரவரியில் இருந்துமே மாதம் வரையிலும்பயிரிட்டால் விவசாயிகள்அதிக பலன்பெறலாம்.
விதையளவு
செண்டுமல்லிஒரு ஹெக்டேருக்குகுட்டை ரகத்துக்கு 75 ஆயிரம் விதைகளும், நெட்டை ரகத்துக்கு 55 ஆயிரம் விதைகளும்இட வேண்டும்.
நாற்றங்கால் பராமரிப்பு
பதப்படுத்தப்பட்டதென்னை நார்க்கழிவை வளர்தட்டுகளில் நிரப்பிகுழிக்கு ஒருவிதை வீதம்நிரப்பி ஒன்றின்மேல் ஒன்றாகஅடுக்கி பாலித்தீன்பேப்பர் மூலம்மூடி மூன்றுநாள்கள் 50 சதவீதநிழல் உள்ளஇடத்தில் அல்லதுநிழல் வலையில்வைக்க வேண்டும். அப்போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். பின்னர் ஒருநாளைக்கு இருமுறை பூவாளி மூலம்தண்ணீர் தெளிக்கவேண்டும். நாற்றங்காலுக்கு 19:19:19 என்ற உரத்தைலிட்டருக்கு 5 கிராம்என்ற அளவில்கலந்து 15ஆம்நாள் தெளிக்கவேண்டும்.
நடவு முறை மற்றும் இடைவெளி
25 நாள்கள் வயதானசெண்டுமல்லி நாற்றுகளைநடவு செய்யவேண்டும். குட்டைவீரிய ஒட்டுரகத்தை 40 ல 30 செ.மீ. அளவில் ஒருஹெக்டேருக்கு 74 ஆயிரம்செடிகளை நடலாம்.
நெட்டைவீரிய ஒட்டுரகத்தை 60 ல 30 செ.மீ. என்ற அளவில் 55 ஆயிரம் செடிகளைநடலாம்.
நீர்ப் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடுதல்
வீரியஒட்டு ரகத்துக்கு 90:90:75-வுடன் தழை, மணி, சாம்பல்சத்து ஆகியவற்றைபயிர் காலம்முழுவதும் நீர்பாசனத்துடன்இட வேண்டும்.
நடவுசெய்த 30, 60ஆம்நாள்களில் களைஎடுக்க வேண்டும்.
மண் அணைத்தல்
களையெடுக்கும்சமயத்தில் மண்அணைத்தல் அவசியம். இது நன்குவேர் பிடிக்கவும், செடியினை தாங்குத்திறனை அதிகப்படுத்தவும்உதவுகிறது.
அறுவடை
மேற்கண்டமுறைகளை முறையாககடைபிடித்தால் நடவுசெய்த 60ஆம்நாளில் இருந்துமகசூல் கிடைக்கும். காலை நேரத்தில்பூக்களைச் செடியில்இருந்து பறித்துகூடை அல்லதுசாக்குப் பையில்அடைத்து விற்பனைக்குஎடுத்துச் செல்லலாம்.
0
Leave a Reply