25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெற்றிலை ரசம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றிலை ரசம் .

தேவையான பொருட்கள் - 2 கருப்பு வெற்றிலை

அரைக்க:- 1டீ ஸ்பூன்மிளகு 1டீ ஸ்பூன்சீரகம்,.4 பூண்டு .1டீ ஸ்பூன்தனியா,1ப.மிளகாய் , 2தக்காளி . 1கப்புளி கரைசல்

தாளிக்க:- 1டீ ஸ்பூன்கடுகு, 2 ஸ்பூன்பசு நெய்,2 சி.மிளகாய்,1டீ ஸ்பூன்சீரகம்,1டீ ஸ்பூன்ம,தூள்,1டம்ளர் தண்ணீர்,கொத்தமல்லி இலை 2 ஸ்பூன், அலங்கரிக்க – வெற்றிலைதுண்டுகள்

செய்முறை - தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில், தனியா, மிளகு, சீரகம், ப.மிளகாய், பூண்டு, ஆகியவற்றை போட்டு சற்று கொர கொரப்பாக, அரைக்கவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், சி.மிளகாய், தாளித்ததும், ம.தூள், உப்பு போடவும்.அடுத்து புளிக் கரைசலை ஊற்றி, 5 நிமிடம் புளி வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுதை போடவும்.

கொதித்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.சிறிய கடாயில் நெய் காய்ந்ததும், வெற்றிலை துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கினதை ரசத்தில் கலக்கவும்.ஒன்று சேர கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு, ரசத்தை பௌலுக்கு மாற்றவும்.

இப்போது, சுடசுட, மருத்துவ குணம் நிறைந்த,வெற்றிலை ரசம் தயார்.சளி, இருமலுக்கு ஏற்ற ரசம்.சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News