பாலக் பன்னீர்.
தேவையான பொருட்கள்:
1கட்டு பாலக் கீரை,
பன்னீர் துண்டுகள்: 200 கிராம்,
2பச்சை மிளகாய்,
1வெங்காயம்,
1தக்காளி,
2பல் பூண்டு,
ஒரு சிறிய துண்டு இஞ்சி,
1/4டீஸ்பூன் சீரகம்,
பிரிஞ்ஜி இலை,
1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1டீஸ்பூன் மிளகாய் தூள்,
1/4டீஸ்பூன்ஸ்பூன் கஸ்தூரி மேத்தி,
1டேபிள் ஸ்பூன் ப்ரஷ் கிரீம்,
உப்பு தேவையான அளவு,
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை அல்லது பட்டர்.
செய்முறை
நான்கு கப் தண்ணீர், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி,
பாலக் கீரையை சேர்த்து கழுவி சுத்தம் செய்துஒரு நிமிடத்தில் வெளியில்
எடுக்கவும்.
எடுத்த கீரையை பத்து ஐஸ் கூப்ஸ் சேர்த்த தண்ணீரில் போட்டு, ஒரு நிமிடம்
விட்டு எடுத்து, தண்ணீரை வடித்து விடவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தயாராக வைத்துள்ள பாலக் சேர்த்து
விழுதாக அரைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி சூடுசெய்து,பிரிஞ்சி இலை, பொடியாக
நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்
தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, அரைத்து வைத்துள்ள பாலக்
விழுது, உப்பு அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பின்னர் அரை டீஸ்பூன் காரம் மசாலாத்தூள், பன்னீர் சேர்த்து, ஒரு நிமிடம்
கொதித்ததும் இறக்கி, கஸ்தூரி மேத்தி, பிரஷ் கிரீம் சேர்த்தால், சுவையான பாலக்
பன்னீர் சுவைக்கத்தயார். பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி
நிறைந்துள்ளது.
பன்னீர், சப்பாத்தி, ரோட்டி, நான், குல்ச்சாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
0
Leave a Reply