25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2025 அன்று ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)”  மற்றும் என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2025 அன்று ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” மற்றும் என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில்கொண்டு “ தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு 14.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசபந்து மைதானத்திலிருந்து ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” - ”என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கையெழுத்து பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

 இப்பேரணியின்போது குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தெருக்கூத்து கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளலாம்.  இப்பேரணியில் கலந்து கொள்பவர்கள் நீலநிற (Blue) உடை அணிந்து பங்கேற்றவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News