25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா, ஒலி பெருக்கி அறிவிப்பு ஏற்படுத்த வேண்டும்,என போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா, ஒலி பெருக்கி அறிவிப்பு ஏற்படுத்த வேண்டும்,என போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ரூ.3.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.திறப்பு விழா நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பிற்கு போலீஸ், பஸ் நிறுத்த ஊர் பெயர் எழுதாதது, நேர அட்டவணை என அடிப்படை வசதிகளும் போதிய பாதுகாப்பும் இல்லாமல் பயணிகள் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.

இது தவிர அரசு மகப்பேறு 'மருத்துவமனை முன்பு ஏற்கனவே இருந்த தற்காலிக பஸ் ஸ்டாப்பும் செயல்பாட்டில் இருந்ததால், பஸ் ஸ்டாண் டில் கூட்டம் குறைவாக இருந்து பயணிகளில் முழு அளவு வரவில்லை.இந்நிலையில் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நகராட்சி கமி ஷனர் நாகராஜன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமான், வடக்கு போலீஸ் எஸ்.ஐ ராஜ்குமார் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் பஸ் ஸ்டாண்டில்பயணிகள்பாதுகாப்பிற்காக 15 கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தி அறிவிப்பு செய்ய ஒலி பெருக்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News