25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சத்து நிறைந்த கேரட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சத்து நிறைந்த கேரட்

மத்திய ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகப் பகுதியான ஈரானில்,10ம் நுாற்றாண்டில், முதன்முதலில் கேரட் அறிமுகமானது. அங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என, உலகெங்கிலும் பரவியது.

ஆரம்பத்தில் ஊதா, மஞ்சள், வெள்ளை நிறத்திலேயே கேரட்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள விவசாயிகள், 16ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்திய ஆரஞ்சு நிற கேரட்கள், தற்போது உலகம் முழுவதும் பரவலான புழக்கத்தில் உள்ளன.

கேரட்டில், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, கே,நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. கண் பார்வை, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கேரட் உதவுகிறது. குறைந்த கலோரி, கொழுப்பு இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாலைக்கண் நோயை குணப்படுத்தும் மாமருந்தெனவும் போற்றப்படுகிறது.

கேரட்டில் அதிக அளவு பீட்டா-கரோட்டின் (Beta-carotene) மற்றும் வைட்டமின் A உள்ளது, இது மாலைக்கண் நோய் வராமல் தடுத்து, கண்பார்வையை கூர்மையாக்குகிறது.

கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், இளமையுடன் இருக்கவும் உதவுகின்றன.

கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சீராக வைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால், செரிமான கோளாறுகளை சரிசெய்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக கேரட் பயன்படுகிறது.

கேரட்டில் உள்ள வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. 

கேரட் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து இரவு பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது, 

தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்கும்.இதில் அதிகளவில் பொட்டாசியம் நார்ச்சத்து உள்ளன மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

கேரட் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத்தொல்லை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

சாலட், சூப், அல்வா, கேக் மற்றும் புட்டிங் போன்ற பல உணவு வகைகளில்கேரட் பயன்படுத்தப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News