25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி!

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் (4வது சீசன்) நடந்து வருகிறது. இதில் கோப்பை வெல்லும் அணி 2026-27 புரோ லீக் தொடருக்குத் தகுதி பெறும்.

'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியதைத் தொடர்ந்து, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, தனது பிரிவில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்த இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை உருகுவேயை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News