1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் ,அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) மூன்றாம் நாளான இன்று (16.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சாத்தூரில் நடைபெற்ற இத்தீர்வாயத்தில் 17-பயனாளிகளுக்கு கணினி வழி இணைய பட்டாக்களையும், 4-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மரணமடைந்த 3-நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.22,500/- வீதம் மொத்தம் ரூ.67,500/-க்கான உதவித் தொகையினையும், 2-பயனாளிகளுக்கு அடங்கல் நகலினையும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், ஜமாபந்தியின் முதல் நாளன்று மின்கலன் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி நபரின் கோரிக்கை மனுவினை ஏற்று ரூ.78,000/-மதிப்பிலான மின்கலன் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டியினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.
அதன்படி, சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,
காரியாபட்டியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும்,
வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) அவர்கள் தலைமையிலும்,திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் தலைமையிலும், நடைபெற்று வருகிறது.
இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் திரு.மு.வடிவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply