25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


May 23 rd விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

May 23 rd விளையாட்டு போட்டிகள்

பாட்மின்டன் 

'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர் லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. 

ஹாக்கி 

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோலீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.

அடுத்து நெதர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாடுகிறது. அதன்பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர் கொள்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார். 

குத்துச்சண்டை

தாய்லாந்து ஓபன் தொடருக்கான (மே 24 ஜூன் 1),19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நிகில், அமித் குமார், தீபக், யாசிகா, தமன்னா உள்ளிட்டோர் தேர்வாகினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News