25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கைலாச கோயில்: Ellora
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கைலாச கோயில்: Ellora

கைலாசா கோயில் இந்தியாவின் மிகப்பெரிய குடைவரைக் கோயில்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் எல்லோராவில் அமைந்துள்ளது. இது ஒரே பாறையைக் குடைந்துச் செதுக்கப்பட்ட கோயில் என்று கூறப்படுகிறது அதோடு பல்லவர்களின் கட்டிடக்கலையினைத் தடயங்களாக வைத்திருக்கிறது. வரலாற்று சான்றுகளின்படி இந்த கோயில் கி.பி8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.எல்லோரா கோவில் போல் தலை கீழாக கட்டப்பட்ட கோவில் ,தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான். கோவில் 

.இந்த கைலாச நாதர் கோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில், இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இது 2 கிலோமீட்டர் சுற்றுப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஹிந்து, புத்த மற்றும் ஜெயின் கோவில்கள் என்று மொத்தம் 34 கோவில்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளில், கைலாச நாதர் கோவில் மிகப்பெரிய குகை கோவிலாகும்.ஒரே பாறையை குடைந்து கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில்இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாறைகளில் இருந்து செதுக்கப்பட்ட கோவில்கள் இருந்தால் கூட, எந்தக் கோவிலுக்கும் இல்லாத அளவுக்கு கைலாசநாதர் கோவிலுக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. இந்திய கட்டிடக்கலையின் பெருமைக்குரிய சான்றாக இருக்கும் குகை கோவில்களில் இறுதியாக வடிவமைக்கப்பட்ட கோவில் கைலாசநாதர் கோவில் தான் அடையாளத்தை இது சுமந்திருக்கிறது. கைலாச நாதர் கோவிலுக்குப் பிறகு, பாறையைக் குடைந்து எந்தக் கோவிலும் உருவாக்கப்படவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News