25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் வெற்றி.

உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

பெண்கள் பிரிவு.

பெண்களுக்கான 9-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா, சவிதா ஸ்ரீ ஆகியோர் களமிறங்கினர்.

உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா, குல்ருக்பெகிமை வீழ்த்தினார். வந்திகா, நிலுபர்கோனை தோற்கடித்தார். ஹம்பி மற்றும் சவிதா ஸ்ரீ தங்களது ஆட்டங்களை ‘டிரா’ செய்தனர்.

இதையடுத்து இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஓபன் பிரிவு.

ஓபன் பிரிவின் 9-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் ஆகியோர் களமிறங்கினர்.

உலக சாம்பியனான குகேஷ், 53-வது நகர்த்தலில் அலெக்சாண்டரை வீழ்த்தினார். பிரக்ஞானந்தா, அர்ஜுன் மற்றும் நிஹால் சரின் ஆகியோர் தங்களது ஆட்டங்களை ‘டிரா’ செய்தனர்.

முடிவில் இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்.

பெண்கள் மற்றும் ஓபன் என இரு பிரிவுகளிலும் இந்திய அணிகள் 9-வது சுற்றில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. அடுத்தடுத்த சுற்றுகளிலும் இந்திய அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News