25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அமெரிக்காவில் நடக்கவுள்ள இந்தியா, அமெரிக்க நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'செக் மேட்' செஸ் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்காவில் நடக்கவுள்ள இந்தியா, அமெரிக்க நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'செக் மேட்' செஸ் போட்டி .

செஸ் உலகில் முதன் முறையாக இரு நாடுகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இருதரப்பு கிரிக்கெட் போன்ற இப்போட் டியில் செஸ் உலகின் வலுவான இந்தியா - அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

.போட்டியை நடத்தும் நாடு  என்பதால், அமெரிக்க நட்சத்திரங்கள், 5 போட்டியிலும் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவர். முதல் போட் டியில் இந்தியாவின் குகேஷ்-அமெரிக்காவின் நகமுரா மோதுவர். அதைத் தொடர்ந்து அர்ஜுன்-பேபியானா காருணா, சாகர் ஷா -லெவி ரோஸ்மன், திவ்யா-காரிஸ்சா, ஈதன் வாஸ்-அடீவ்யுமி மோத உள்ளனர். இதன் பின் இரு அணிகள் மோதும் போட்டி இந்திய மண் ணில் நடத்தப்பட உள்ளது. 

 இந்திய அணிக்கு உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க அணிக்கு உலகின் 'நம்பர்-2' ஹிகாரு நகமுரா தலைமை ஏற்கின்றனர். மொத்தம் 5 போட்டி நடக்கும். ஒவ்வொரு போட்டி யிலும் இருவருக்கும் தலா 10 நிமிடம் தரப்படும். ஒருவேளை 'டிரா' ஆனால், அடுத்து 5 நிமிடம், 1 நிமிடம் கொண்ட போட்டியாக, முடிவு கிடைக் கும் வரை நடத்தப்படும். 

'சேக் மேட்' என பெயரிடப்பட்ட இப்போட்டி வரும் அக்டோபர் 4ல், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள 1 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, இஸ்போர்ட்ஸ் மைதானத்தில் (ஆர்லிங்டன்) நடக்க உள்ளது.2500 பேர் நேரடியாக இதை கண்டு ரசிக்கலாம். போட்டிகள் 90 அடி உயரமான ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பாகும். வழக்கமாக செஸ் அரங்கில் நிலவும் அமைதி போல இல்லாமல் உற்சாகத்துடன் பார்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News