25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள் ,கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள் ,கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு .

 ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது உணவுப் பொருட்களின் பெயர், விலாசம், தயாரிப்பு காலாவதி தேதி உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் தெரியும் வகையில் அச்சிட வேண்டும் என்பது அடிப்படை விதி.இந்நிலையில் வளர்ந்து வரும் ராஜபாளையம் நகர் பகுதியில் பெரும்பாலான உணவகங்கள், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றில் கலப்பட உணவு பொருட் கள், அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

ஓட்டல்களில் விற்பனையாகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட் புட் கடைகளில் எந்தவித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பு போன்றவை மக்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News