25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை ஹாக்கி: 51 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் கனவை நோக்கும் இந்தியா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை ஹாக்கி: 51 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் கனவை நோக்கும் இந்தியா.

உலக கோப்பை ஹாக்கியில் வரலாறு படைக்கும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை சுமந்தபடி போட்டியில் பங்கேற்கிறது.

பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு) நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து லீக் சுற்றில் மோதுகின்றன.

'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆம்ஸ்டல்வீனில் உள்ள வாகனர் மைதானத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்குகிறது.

உலகக் கோப்பை கனவுடன் இந்திய பெண்கள் அணி.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி, கேப்டன் சலிமா டேடே தலைமையில் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நோக்குடன் களமிறங்குகிறது. 1974-ஆம் ஆண்டு பெற்ற 4வது இடமே இதுவரை இந்திய பெண்கள் அணியின் சிறந்த சாதனையாக உள்ளது.

தொடருக்கு முன்பாக பேசிய கேப்டன் சலிமா டேடே, "உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி, நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே எங்களின் இலக்கு," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *