25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கொடி மரத்தின் சிறப்புகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொடி மரத்தின் சிறப்புகள்.

கொடிமரம் என்பது இந்து கோவில்களில் பலி  பீடத்துக்கு அருகே கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். பல ஆலயங்களில் கொடி  மரமானது உள்ளது. சமஸ்கிருதத்தில் கொடிமரம், 'துவஜஸ்தம்பம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடிமரம்  மிகவும் புனிதமானது. இதன் சிறப்புகளைப் பற்றி காண லாம்.

 ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகு தியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டபமாகவும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்பிள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை ராஜ கோபுரமாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில் திருவிழா நடைபெறும் போது முதல் நாள் கொடியேற்றமானது நடை பெறும். தேவர்கள், இந்த கொடிமரத் தின் வழியாகத் தான் கோவிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.

கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம். ஏனென் றால் கோவிலில் இறைவனை வணங்குவதும், கொடி மாத்தின் கீழே விழுந்து வணங்குவதும் ஒன் றாக கருதப்படுகிறது. கொடிம ரத்தை வணங்கும் போது மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, தூய மனதுடன் வணங்க வேண்டும். இறைவனின் அருளைப்பெற, நம்மை தகுதிப்படுத்த கொடிமர வணக்கம் அவசியமாகும்.

நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமானால், நமது மனம் ஒருநிலையுடன் நிறுத் தப்பட வேண்டும். இதை உணர்த் தவே கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். அசுர  சக்திகளை அழிக்கவும், சிவகணங் களை கோவிலுக்குள் வரவைக்க வும். ஆலயத்தையும் பக்தர்களையும்  காக்கவும் கொடி ஏற்றம்  நடத்தப்படுகிறது.

கொடி மரத்தின் உச்சியில் அந் தந்த கோவில் இறைவனின் வாக னம் அடையாள சின்னமாக அமைக் கப்படும். அதன்படி, விநாயகர் கோவிலில் மூசிகம், சிவன் கோவி லில் நந்தி, விஷ்ணு கோவிலில் கரு டன், குபேரன் கோவிலில் நரன், முருகன் கோவிலில் மயில் அல்லது சேவல், சாஸ்தா கோவிலில் குதிரை, வருணன் கோவிலில் அன்னம், எமன் கோவிலில் எருமை, சனிபக வான் கோவிலில் காகம், இந்திரன் கோவிலில் யானை, துர்க்கை மற் றும் அம்மன் கோவில்களில் சிம்மம் என உருவங்கள் பொறித்த கொடி ஏற்றப்படும்.இவ்வாறு ஏற்றப்படும் கொடியானது திருவிழா இறுதி நாளில் இறக்கப்படும்.

 பல்வேறு சிறப்புகளை உடைய கொடிமரத் துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆரா தனை, நைவேத்தியம் முதலான அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதி, அந்த அளவுக்கு கொடிமரம் மூலவருக்கு நிகராக கருதப்படுகிறது, கொடிமரத்துக்கு அருகில் நின்று நாம் வேண்டும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் சென்றடையும் என்பது நம்பிக்கை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News