ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட பச்சைப் பட்டாணி
பச்சை பட்டாணியில் மாவுச்சத்து, கொழுப்பு, தயாமின், நயாசின், ரைபோஃப்ளேவின், புரதச்சத்து(இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்கு ஈடானது), கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து,போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளன.உடலுக்குச் சக்தியைத் தரும், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும், மூளை நோயைத் தடுக்கும்.ஜீரண உறுப்புகள் பலமடையும். குடல் புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றமும் நீங்கும், வாய்,நாக்குப் புண் குணமாகும், ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும்.
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது.உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படாமல் இருக்கவும், பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதிலுள்ள வைட்டமின் சி பயன்படுகிறது.நுரையீரல் நோய் குணமடையும், நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது, இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.மருந்துபோல இதைத் தினமும் ஒரு கைப்பிடி அளவுபிறகாய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுங்கள்.
0
Leave a Reply