ராகி இடியாப்பம்.
தேவையான பொருட்கள்:
2கப் ராகி மாவு - 2கப்,
தண்ணீர்- 2கப்,
2ஸ்பூன் எண்ணெய்- 2ஸ்பூன்,
உப்பு- தேவையானஅளவு,
தேங்காய் துருவல் - தேவையான அளவு,
சர்க்கரை- தேவையான அளவு.
செய்முறை:
1கப் மாவுக்கு 1கப் தண்ணீர் தான் அளவு.முதலில் காடாயில்,2கப் தண்ணீர் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2ஸ்பூன் எண்ணெய் கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவும்.கொதித்ததும்,அடுப்பை சிறு தீக்கு மாற்றி,மாவு சேர்த்து கிளறவும்.முதலில் தண்ணீர் போதாதது போல் தோன்றும். கிளற கிளற சரியாகிவிடும்.
திருப்தியாக இல்லையெனில்,1-2ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.2நிமிடங்களில் மாவு வெந்து திரண்டு வந்துவிடும்.அடுப்பை அணைத்து,2-3நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.பின் இளஞ்சூடாக இருக்கும் போது,சூடு பொறுக்க கையில் சிறிதளவு தண்ணீர் நனைத்துக் கொண்டு 1நிமிடத்திற்குப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பின் இட்லி குக்கரில்,2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கும் நேரத்தில்,இடியாப்ப அச்சில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து பிழிந்து கொள்ளவும்.பின்,குக்கரில் வைத்து15 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறியதும் இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.வேக வைக்கும் போது,தேங்காய் துருவல் சேர்த்தும் வேக விடலாம்.சுவையான, ராகி இடியாப்பம் ரெடி.
0
Leave a Reply