மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNPSC Group –I, Group-IV, Group-II/IIA, TNUSRB, SSC, Railway போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்காக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் ரூ.800/hr வழங்கப்படும். மேலும், 22.12.2025 அன்று காலை 11:00 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு வரும்போது பயிற்றுநர்கள் பாடக்குறிப்புகள், PPT, முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், மாதிரித் தேர்வு நடத்துவதற்கான கேள்வி மற்றும் பதில்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) ஆகியவற்றை தயார் செய்து எடுத்துவர வேண்டும்.
மேலும், மேற்கண்ட தேர்வுகளில் முதன்மை தேர்வுகளில் கலந்து கொண்ட அனுபமிக்க இளைஞர்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் தங்களது சுயவிவர படிவத்தினை https://forms.gle/PH1QbUprWxVbp3LQA google form அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் அனுப்புவதோடு நேரில் கலந்து கொள்ளவும். மேலும், கூடுதல் தகவலுக்கு 93601-71161 என்ற Whatsapp எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply