நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19.12.2025) வேளாண்மைத்துறை சார்பில், பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.
தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தவணைத் தொகை பெற தங்கள் நில உடைமை விபரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் விவசாயிகள் நில ஆவணங்களுடன் வந்து, தங்களது நில உடைமைகளை பதிவு செய்து பயனடைந்தனர்.மேலும், இதுவரை பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு சென்று நில உடைமை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
0
Leave a Reply