தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் லக்சிதா, ஷர்வன் ஜோடி தங்கம் வென்றனர்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் டில்லியில் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு போட்டி ,தகுதிச் சுற்றில் இந்திய ஆர்மி அணியின் லக்சிதா (290), ஷர்வன் (292) இணைந்து 582 புள்ளி பெற, முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர். இதில் லக்சிதா, ஷர்வன் ஜோடி 16-10 என ஹரியானாவின் சுருச்சி, சாம்ராட் ராணா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றினர்.
ராஜஸ்தானின் அஞ்சலி, அமித் சர்மா ஜோடி 17-13 என கர்நாடகாவின்ஜோனாதன், அவந்திகா ஜோடியை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வென்றது.
மத்திய பிரதேசத்தின் ஆராத்யா, யுக்பிரதாப் ஜோடி, ஜூனியர் பிரிவில் கர்நாடகாவின் கேம்பெர்யா, டேரன் ஜோடியை 16-8 என வென்று தங்கம் வென்றனர்.
0
Leave a Reply