ரவா இடியாப்பம்.
தேவையான பொருட்கள்:
வறுத்த அல்லது வறுக்காத வெள்ளை ரவை - 2கப்,
தண்ணீர் - 4கப்,
உப்பு தேவையான அளவு,
தேங்காய் துருவல் – தேவையானஅளவு,
சர்க்கரை – தேவையானஅளவு,
இரண்டரை ஸ்பூன் எண்ணெய் ,
செய்முறை :
1கப் ரவைக்கு2கப் தண்ணீர் தான் அளவு.கடாயில்4கப் தண்ணீர் சேர்த்து,அதனுடன் உப்பு மற்றும்2ஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்க விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும்,சிறு தீக்கு மாற்றி,ஒரு கையால் ரவை சேர்த்து,மறு கையால் கிளறவும்.
சில நிமிடங்களில் ரவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.2-3 நிமிடங்களில் நன்றாக வெந்து,கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்.இனி,அடுப்பை அணைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.
பின் கையில்1/2ஸ்பூன் எண்ணெய் தடவி1 நிமிடத்திற்கு மாவை(கையால் அல்லது கரண்டியால் அழுத்திவிட்டு)நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
உருட்டிய உருண்டைகளை அதே கடாயில்(சூடாக இருக்கும்) போட்டு மூடி வைக்கவும்.ஆறும் முன் இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும்.ஆறினால், பிழிய கடினமாகும் வாய்ப்பு உள்ளது.
இட்லிகுக்கரில்2டம்ளர்தண்ணீர்விட்டுகொதிக்கவிடும்நேரத்தில்,உருண்டைகளை அச்சில் விட்டுப் பிழியவும்.பின் குக்கரில் வைத்து 7-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறிய பின் எடுத்தால் பூப்பூவாக வரும்.சுவையான, மெது மெதுவான ரவா இடியப்பம் ரெடி.எப்பொழுதும் போல், தேங்காய் துருவல் மற்றும் சர்கரை அல்லது தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடலாம்.
0
Leave a Reply