கோதுமை மாவு இடியாப்பம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 500 கிராம்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கோதுமை மாவை15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். அல்லது கோதுமை மாவைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து கொண்டு, இடியாப்ப உழக்கில் இட்டுப் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக் கொள்ள கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை ஏற்றது.
0
Leave a Reply