25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமுதாயம் முன்னேறுகின்றதா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமுதாயம் முன்னேறுகின்றதா?

நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே பல விஷயங்களில் முன்னேறுவதும் ,பின்தங்குவதும் சகஜமாகிவிட்டது. முன்பைவிட இப்பொழுது எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம் என்று கூறினாலும் எப்படி? என்ற கேள்வி எழுகின்றது. விஞ்ஞான முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன முன்னேற்றம். முன்பு 200ரூ சம்பளத்தில் சுபிட்சமாக வாழ்க்கை நடத்தி மிச்சம் வைத்து சந்தோஷித்த ,அதே மக்கள் இன்று 20,000 ரூபாய் கிடைத்தாலும் ஏதோ ஒன்று குறைகின்றது என்று தான் கூறுகின்றார்கள்.

சாதாரணமாகஒருவீடுஎன்றுஎடுத்துக்கொள்வோம்.இன்றையதேவைகள்? முதலில்கரண்ட், பேன், ரேடியோ, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, டி.வி. ஏ.சி., டெக், மைக்ரோ வேவ் ஓவன், சைக்கிள், ஸ்கூட்டர், கார் ஒரு காரல்ல 2 கார், சொகுசான மாளிகை, பாரின் டூர் இப்படி அடுக்கிக் கொண்டே செல்கிறோம். இதெல்லாம் இருப்பினும் புதிய வரவு செல்போன், ஹோம் தியேட்டர் என்று ஆரம்பித்து இளைய சமுதாயத்தினர் வீட்டிற்கு உள்ளே வரும்பொழுது கேட் திறக்க ஆளில்லை என்று ஆட்டோமேட்டிக்காக திறக்கும் வசதியை வெளிநாடுகளைப்போல நாமும் ரிமோட் வைத்துத் திறக்க வேண்டும்  என்று அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இந்த வசதிகளெல்லாம் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தத்தானே? புதிய வரவுகளால் கிடைக்கும் நேர மிச்சத்தை நாம் உழைத்து முன்னேற உபயோகப்படுத்த வேண்டும். விஞ்ஞான முன்னேற்றத்தின் வசதிகளையெல்லாம் சுலபத்தவணைகளில் வாங்கி ( EMI ) அதனால் கிடைக்கும் நேர மிச்சத்தை என்ன செய்கின்றனர்.  இளைஞர்கள்,  பெண்கள்  தங்களது கடமைகளை மறந்து லேட்டஸ்ட் சினிமா, பல விதமான ஹோட்டல் சாப்பாடுகளை சாப்பிடுவது, பிரண்ட்ஷிப் வட்டாரங்களை பெருக்குவதாகக் கூறிக் கொண்டு கிளப், பார்ட்டி, என்று அலைகின்றனர். இவர்கள் இப்படி என்றால் பெரியவர்கள்  செல்போன்,  டி.வி., என்ற போதை வஸ்துவிற்கு அடிமையாகிவிட்டனர். டி.வி. என்பது பொழுது போக்கிற்கான நிகழ்ச்சிதான். அதை முழு நேர தொழிலாக மிச்சமாகும் நேரத்தை வீணாக்கி, சமுதாயப் பேரழிவிற்கு வழிவகுக்கின்றனர்.  

நம்முடைய டென்ஷனைக் குறைக்க நாம் டி.வி, செல்போனை பொழுது போக்காக எடுத்துக் கொண்டாலும் ,அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை விட்டு விட வேண்டும். இளைஞர்களிலிருந்து முதியோர் வரை சுண்டி இழுக்கும், கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பை ரெம்பவே குறைக்க வேண்டும். இவற்றில் காண்பிக்கப்படும் வன்முறை, வக்கிரம், தீவிரவாதம் போன்றவற்றின் கொடூரமான பாதிப்பை மக்கள் அறிய முடிகின்றது.. உலகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. அந்தக் காலத்தில் யசோதை கிருஷ்ண பரமாத்மாவின் வாயில் உலகத்தை அப்படியே பார்த்த மாதிரி நம் எல்லோர் வீட்டிலும் டி.வி. பெட்டியில் உலக நிகழ்ச்சி அனைத்தையும் பார்க்கிறோம். கிருஷ்ணர் எப்படி தீயசக்தியை அழித்தும், நியாயத்தை நிலைநாட்டியும் வாழ்ந்து காட்டினார். சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் குடும்ப ஓற்றுமை, கலாச்சார பண்பு, அன்பு மட்டும் போதாது.நேரத்தை முறையாகப் பயன்படுத்துவது நம்முடைய முன்னேற்றத்தில் 50% பங்கு கொள்கின்றது. அதனால் இயந்திர கதியில் எந்த நேரமும் ,நேரத்தை -வீணாக்காமல் வேலை, வேலை என்றால் என்ன ஆகும்? மன நிம்மதியும் பாதிக்கப்படும். எந்த ஒரு செயலையும் காலம், இடம், நேரம்  அறிந்து  நம் சமுதாயத்தை நாம் முன்னேற்ற மடையச் செய்ய வேண்டும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News