25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தூக்கத்துக்கு சீரகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூக்கத்துக்கு சீரகம்.

சில காரணங்களால் சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, ராத்திரி9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பயன் கிடைக்கும். வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்க. சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.

அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மிளகு, சீரகம் இரண்டையும் சமஅளவு சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு வெருகடி அளவு தேனில்குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்துவாப்பிடஅஜீரணத்தால்ஏற்பட்டகடுமையானவயிற்றுவலி,பித்த மயக்கம், அரோசகம் (உணவின் மீது வெறுப்பு) ஆகியவை போகும்.
சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத்
துன்பம் தரும் வாந்தி குணமாகும். ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிடி) அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன்
சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும். சீரகம், இந்துப்பு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மைய
அரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.
சீரகப் பொடியோடு கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க அல்சர் வயிற்று உபாதை குணமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News