25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி.

உலக அச்சுறுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், கண்டறிந்து விட்டால் விரைவாக சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றி விட முடியும்.நாம் மூச்சை வெளிவிடும் போது அதில் வெளிப்படுகிற ஒருவித வேதிப்பொருளை வைத்து நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சீனாவைச் சேர்ந்த ஜிஜி யாங் பல்கலை கூறியுள்ளது.

நம் உடலில் கொழுப்பானது உடைக் கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது, ஐசோப்ரின் என்னும் வேதிப் பொருள் வெளியாகும். இது நாம் விடும் மூச்சில் கலந்து உடலை விட்டு வெளி யேறி விடும். இதனுடைய அளவு குறை வாக இருந்தால், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புஉண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வேதிப்பொருள் களைக் கண்டறிவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. இது தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கடைசியில் பிளாட்டினம், இண்டியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் கலந்த ஒரு சென்சாரை உருவாக்கினர். இது மிகக் குறைந்த அளவு வெளியேறுகின்ற ஐசோப்ரினைக் கூடக் கண்டறிந்து விடும்.

விஞ்ஞானிகள் 13 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஐந்து பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள். இவர்களின் வெளியிடும் போது, நுரையீரல் புற்றுநோய் உள்ள மூச்சை சென்சார் கொண்டு ஆராய்ந்தபோது நுரையீரல் புற்றுநோய் உள்ள வர்களை விட இல்லாதவர்களுக்கு  அதிகமான ஐசோப்ரின் வெளியாவது தெரிந்தது.இந்த சென்சாரை மேலும் செம்மைப் படுத்தி, நவீனமயமாக்கி, எளிமையான ஒரு கருவியாக வடிவமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.அவ்வாறு உருவாக்கப்பட்டு விட்டால் நுரையீரல் புற்றுநோயை, பெரிய பொருட் செலவு இல்லாமல், நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல்மிகச் சுலபமாக கண்டறிந்து விடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News