25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புயல் வீசும் முன்பே தடுக்க முடியுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புயல் வீசும் முன்பே தடுக்க முடியுமா?

புயலின் தாக்குத லுக்கு தயாராக இருப்பதற்குப் பதிலாக அவை வேக மெடுப்பதற்கு முன்பே நிறுத்த முடிந்தால்  எப்படியிருக்கும். ஆஸ்திரேலிய தேசிய பல்கலை பருவநிலை விஞ்ஞானிகள்ஒருதுணிச்சலானஉத்தியைமுன்வைக்கின்றனர்.அதாவது, கடல் புயல்கள் நிலத்தை அடையும் முன்பே அவற்றை பலவீனப்  படுத்துவது மட்டுமல்ல, தடுக்கவும் செய்யலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

 புயல் உருவாக அவசியமான, சூரிய ஒளியைத் தடுக்கும். நுண் துகள்களை வளிமண்டலத்தில் துாவுவதுதான் உத்தி.

இந்தத் துகள்கள், ''ஸ்ட்ராடோஸ்பிய ரிக் ஏரோசல்' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை தூவினால், சூறாவளிகள் உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில், வளி மண்டலத்தின் மேல் அடுக்கு, சற்றே குளிர்ச்சியடையும்.

இந்த முறை, கடலின் மேற்பரப் பின் வெப்பநிலையை சற்றே குறைத்து, சூறா வளியின் ஆரம்பகால வளர்ச்சியை சீர்குலைக் கலாம் என்று, கணினி ஒத்திகைகள் (சிமுலே ஷன்) காட்டுகின்றன. இது நெருப்பிற்குஆக்சிஜனை மறுப்பது போன்றது.

இந்த யோசனை, இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இருப்பி னும், இது 'காலநிலை பொறியியல்' (climate engineering) அல்லது புவி பொறியியல் (geoengineering) எனப் படும் வளர்ந்து வரும் துறையின் ஒரு பகுதி யாகும். திட்டமிட்ட, மனிதத் தலையீடு கள் மூலம், தீவிர காலநிலை நிகழ்வு களில், மாறுதல்களை ஏற்படுத்தும் உத்திகள் இவை.

வெப்பமயமாதல் காரணமாக சூறாவளி கள் மிகவும் அழிவுகர மானதாகவும் அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறி வருகின்றன. இதனால், புயல்கள் அதிக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கும் வாய்ப் புகளும் அதிகரித்துள் ளன. அதற்கு முன் பாதுகாப்பு உத்திகளை ஆராய்வது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News