25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் கோவைக்காய் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் கோவைக்காய் .

கோவைக்காய் என்பது இந்தியாவில் பரவலாக கிடைக்கும் ஒரு காய் வகையாகும். வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காயை சமைத்து உண்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை  குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்  ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான அமைப்பைச் சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கோவைக்காய், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.எனவே, இந்த எளிய காய்கறியை உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக சேர்ப்பது மிகவும் புத்திசாலித்தனமான உணவு தேர்வாகும். கோவைக்காயை பொரியல், கூட்டு, சாம்பார் என பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News