25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழுப்பு மலை அணில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழுப்பு மலை அணில்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களிலுள்ள 'காவிரிக்கரைக் காடுகளிலும் மலைக்காடுகளி லும் பழுப்பு மலை அணில்கள் காணப்படுகின்றன.இவற்றுக்குநரையணில்கள்என்றபெயரும்உண்டு.மலையாளத்தில்மலையண்ணான், சாம்பலண்ணான்,புள்ளியண்ணா ன் என்ற பெயர்களாலும், கன்னடத்தில் பெட்ட அல்லுமா என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள பிற மலை அனில்களுடன் ஒப்பிடும் போது இது சிறிய இனமாகும்.

இந்த அணில்களின் முதுகுப்புறம் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும் இடையிடையே முடிகள் நரைத்தாற்போல காணப்படும். அடிப்பகுதி கோழி முட்டை போன்ற மங்கலான வெளிர் நிறத்தில் இருக்கும். காதுகள், பின்னந்தலை, நடுமுதுகு வரை அடர் பழுப்பாகவும் கறுப்பாகவும் காட்சியளிக்கும். இவற்றின் மூக்குப்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தென் படும்.

காதுகள் சிறியதாகவும், வட்டமாகவும் காணப்படும். வால் எஞ்சிய உடற்பகுதியைக் காட்டிலும் நீளமாக அமைந்திருக்கும். இதன் முடி நரை முடிபோலவும், சாம் பல் நிற முடி போலவும் பளிச்சிடும். இவற்றின்அகலமான பாதங்களும், நன்கு வளர்ந்த நகங்களும் மரங்களை பிடித்து ஏறுவதற்கு உதவியாக உள்ளன. கை,கால்களில் நன்கு வளர்ந்த நான்கு விரல்களையும், ஒரு சிறு கட்டைவிரலையும் கொண்டிருக்கின்றன.

பழுப்பு மலை அணில்கள் புளிய இலைக்கொழுந்துகளையும், வாகை மரங்களின் கொழுந்து, பூந்தூள், மரப்பட்டை ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. இவற்றை தவிர பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், முட்டைகள் போன்றவற்றையும் தின்னும்.

இந்த அணில்களின் பார்வைத்திறன் கூர்மையானது. அதனால் கொன்றுண்ணிகள் வருவதை அறிந்து தப் பித்து விடுகின்றன. இவற்றின் ஓசை சத்தமாக ஒலிக்கும் கொக்கரிப்புப் போல இருக்கும். காலையிலும் மாலையி லும் அதை கேட்கலாம். இவை அருகிலுள்ள மற்ற அணில்களை தொடர்புகொள்ள மெலிதாக ஒலி எழுப்புகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News