25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை (Cymaa Trust) சார்பாக, திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் சுப. மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கி. திலகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்கள். அவர்கள், குழந்தை திருமணமும் பாலியல் வன்முறையும் சமூகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், அவற்றைத் தடுப்பதில் இளைய தலைமுறையின் பங்கு மிக முக்கியம் என்றும் வலியுறுத்தினர்.

“இன்னல்களில் இருந்து குழந்தை பாதுகாப்பு – சமூக கடமையே” என்ற தலைப்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் திருமதி ஜானகி உரையாற்றி, குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பங்கை விளக்கினார்.

“குழந்தைகள் நலன், பாதுகாப்பு – திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திரு. செல்வ அழகு பேசினார்.

“பாலியல் வன்முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு யுக்திகள்” என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர், வழக்கறிஞர் பா. ராஜகோபால் அவர்கள் சிறப்புரையாற்றி, சட்டங்கள், புகார் அளிக்கும் நடைமுறைகள் மற்றும் சமூக பொறுப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற தலைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் பே. இரவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியில் செயல்பட்டு வரும் **“பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும், தமிழ்துறைத் தலைவருமான திருமதி கணேஸ்வரி அவர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.

P. Raja Gopal, Secretary General,

Child Alert Alliance (CAA)

Tamilnadu & Puducherry

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News